Thursday, November 21, 2024

தனுஷ்-செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தனது அண்ணனா செல்வராகவனின் இயக்கத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய அண்ணன் செல்வராகவன்.

இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’, 2006-ம் ஆண்டு ‘புதுப்பேட்டை’, 2011-ம் ஆண்டில் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்திருந்தார் தனுஷ்.

இப்போது 5-வது முறையாக மீண்டும் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று பெயர் வைத்துள்ளார் செல்வராகவன். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றப் போகிறார். இந்தப் படத்தில் இசையமைப்பளராக யுவன் சங்கர் ராஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது கை நிறைய படங்களை வைத்திருக்கும் தனுஷ் இந்தப் படத்தில் எப்போது நடிக்கவிருக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதியன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது சென்னையில்தான் உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்துக் கொடுக்கவிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News