Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

தெரியாத தளங்களில் லாகின் செய்தால் என்னாகும் என்பதை சொல்லும் ‘லாகின்’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜே.எப்.எல். புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் ஜே.கே. தயாரித்துள்ள திரைப்படம் ‘லாகின்’.

இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீனும், ‘அந்தகாரம்’ படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார்.

ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக பல்வேறு தளங்களில் இணைந்து நமது தகவல்களைச் சொல்லி இணைகிறோம். லாகின், பாஸ்வேர்டை உருவாக்கி அதில் நுழைகிறோம். அப்படி உள்ளே செல்லும்போது நமக்குத் தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசும்படம்தான் இந்த லாகின்’.

சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில் நுட்பம் அவர்களது வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News