Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

நடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ளார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் அவர் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்புவதாக இல்லையாம். அமெரிக்க சூழலில் ஒரு தமிழ்ப் படத்தை தானே இயக்கப் போவதாகவும் திட்டமிட்டுத்தான் அங்கே சென்றிருந்தார்.

இப்போது அதில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்திருக்கிறாராம் தனுஷ். அந்தப் படத்தை இயக்கும் முடிவை கைவிட்டுவிட்டு நடிக்க மட்டுமே செய்கிறாராம். இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தனுஷை வைத்து ‘மாரி’, ‘மாரி-2’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்தத் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டுதான் தனுஷ் தாயகம் திரும்புவார் என்பது கடைசி செய்தி.

- Advertisement -

Read more

Local News