Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“டாக்டர்’ படத்தின் ‘ஸோ பேபி’ பாடலின் இசை காப்பியாம்” – அனிருத் மீது எழுந்துள்ள விமர்சனம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போதைய தமிழ்த் திரையுலகத்தின் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையமைப்பில் தற்போது வெளியாகியிருக்கும் ‘டாக்டர்’ படத்தின் ‘ஸோ பேபி’ பாடல் அப்பட்டமான ஒரு ஆங்கில ஆல்பத்தின் காப்பி என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இதையொட்டி படத்தின் விளம்பரத்திற்காக படத்தில் இடம் பெற்ற ‘ஸோ பேபி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பெரும் பரபரப்பாக விளம்பரம் செய்யப்பட்டதால் இந்தப் பாடல் காட்சியை யூடியூபில் இதுவரையிலும் 1 கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த ஸோ பேபி’ பாடலின் இசை அப்பட்டமான ஒரு ஆங்கில ஆல்பத்தின்  காப்பி என்பதை இசை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து இணையத்தில் தேடியலைந்து உண்மையான இசை ஆல்பம் எது என்பதையும் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு இசையும் இந்த வீடியோவில் இருக்கிறது.

அனிருத்தின் இசை காப்பி சர்ச்சையில் மாட்டுவது இது புதிதல்ல. ஏற்கெனவே அவர் இசையமைத்த மிகப் பிரபலமான பாடல்கள் அனைத்துமே ஆங்கில ஆல்பங்களில் இருந்து சுட்டதாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் இசை ஆர்வலர்கள்.

‘கத்தி’ படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீமும் ஒரு ஆங்கில பாப் பாடலின் வடிவம்தான்.

இதேபோல் அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீம் இசையும் ஒரு ஆங்கிலப் பாடலின் இசையை காப்பியடித்து உருவாக்கப்பட்டதுதான்.

இதன் உச்சமாக காப்பி விவகாரதில் சிக்கிய அனிருத்தின் ஒரு பாடலை யூடியூப் தளத்தில் இருந்து அந்த நிறுவனமே நீக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்த ‘எனக்கு கல்யாண வயசுதான்’ பாடலின் இசையும் ஒரு ஆங்கில பாடலின் இசைதான். இது தொடர்பாக அந்த ஆங்கிலப் பாடலை வெளியிட்ட நிறுவனம் யுடியூப் நிறுவனத்திடம் புகார் செய்ததையடுத்து இந்தப் பாடல் யுடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

கமல்ஹாசன் அடுத்து சொந்தமாகத் தயாரிக்கும் ‘விக்ரம்-2 படத்திலும் முந்தைய ‘விக்ரம்’ படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த இசையையே கொஞ்சம் மாற்றியமைத்து புதுசு போல கொடுத்திருந்தார் அனிருத்.

இந்த வரிசையில் தற்போது ‘டாக்டர்’ படத்தின் இந்த ‘ஸோ பேபி’ பாடலும் காப்பியாக அமைந்துவிட்டது தமிழ் இசையுலகத்தில் அனிருத்திற்கு மிகப் பெரிய அவமானத்தைக் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News