Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

அசோக் செல்வன்-ரிது வர்மா-நித்யா மேனன் நடிக்கும் ‘தீனி’ திரைப்படம்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Sri Venkateswara Cine Chitra LLP மற்றும்  Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தீனி’.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – அனி I.V.சசி, தயாரிப்பாளர் – BVSN பிரசாத், வெளியிடுபவர் – பாபி நீடு.B, ஒளிப்பதிவாளர் – திவாகர் மணி, இசை – ராஜேஷ் முருகேசன், பாடல்கள் – ்ரீமணி, வசனம் – நாக சந்தா, அனுஷா, ஜெயந்த் பனுகண்டி, கலை இயக்கம் – ்ரீ நாகேந்திரா தங்கலா, படத் தொகுப்பு – நவீன் நூலி.

தயாரிப்பாளர் B.V.S.N.பிரசாத் இந்தத் தீனி’ படம் பற்றி பேசும்போது, “இது முழுக்க, முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம்.

அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டோம். இன்றைக்கு படத்தின் டிரெயிலரை வெளியிட்டுள்ளோம்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News