Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு கூடிக் கொண்டே செல்கிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா சப்தமில்லாமல் தயாரித்து வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

நடிகர் சூர்யா ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு வெற்றி மாறனின் இயக்கத்தில் ‘வாடி வாசல்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதற்கிடையில் தனது 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக இதுவரையிலும் 9 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது மேலும் 2 படங்களை சப்தமில்லாமல் துவக்கியிருக்கிறார்.

தான் தயாரிக்கும் ஒரு படத்தில் ஒரு அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் ஜோதிகாதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

இப்போது மேலும் ஒரு புதிய படத்தைத் தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய இயக்குநரான கார்த்திக் தங்கவேலு இயக்கவிருக்கிறார். இதில் சூர்யா நடிப்பாரா, இல்லையா என்பது சஸ்பென்ஸாக இருந்தாலும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ‘பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியன் தேர்வாகியிருக்கிறார் என்பது சிறப்பு.

இயக்குநர் வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு வந்து ‘வாடி வாசலைத்’ துவக்கவிருக்கிறாராம்.

- Advertisement -

Read more

Local News