Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

சமுத்திரக்கனி-கஸ்தூரி நடிக்கும் புராணப் படம் ‘சர்ப்ப கிரகங்கள்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புராணப் படம் தயாராகிறது. படத்தின் பெயர் ‘சர்ப்ப கிரகங்கள்’.

படத்தில் சிவன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். திருமாலாக விக்னேஷும், துர்க்கையாக கஸ்தூரியும் நடிக்கவுள்ளனர்.

நாடகக் காவலர் என்று போற்றப்படும் ஆர்.எஸ்.மனோகரின் நாடகக் குழுவில் நடித்த துரை பாலசுந்தரம் இந்தப் படத்தை இயக்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

படத்திற்கு கதை, வசனம், பாடல்களை கே.பி.அறிவானந்தம் எழுதியிருக்கிறார். இணை தயாரிப்பு எஸ்.ஆனந்த், வி.உமாதேவி. தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் இந்தப் படத்தினைத் தயாரித்துள்ளார்.

இந்த ‘சர்ப்ப கிரகங்கள்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் துரை பாலசுந்தரம், “நாம் அன்றாடம் வணங்கும் நவக்கிரகங்களில் உள்ள ராகு, கேது உருவானவிதம், மனித வாழ்வில் அவைகள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மகிமையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் அதிகப் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் உள்ளன. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாகவுள்ளது..” என்றார்.

- Advertisement -

Read more

Local News