‘மாஸ்டர்’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறார் படத்தின் ஹீரோவான நடிகர் விஜய்.
இந்த விழா இன்று ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கான செட் ஈ.வி.இ. ஸ்டூடியோவில் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது.
இப்போது இந்த செட்டில்தான் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி விழாவை அந்தப் படக் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியான முதல் நாளே 25 கோடியை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், தமிழகம் முழுவதும் இருந்து வந்த செய்திகளின்படி படம் வெளியான நாள் முதலே அந்தப் படம் ஓடும் அனைத்துத் தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டுள்ளது என்கிறார்கள்.
எனவே நிச்சயமாக படம் வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம். இதையொட்டி விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படக் குழுவினரும் படப்பிடிப்புத் தளத்தில் பொங்கல் தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

