‘தல’ அஜீத்தின் ‘வலிமை’ படம் எப்போது வெளியாகும் என்பதைவிடவும் படத்தின் படப்பிடிப்பு எப்போதுதான் முடிவடையும் என்பதுதான் இப்போதைக்கு அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காலத்திற்குப் பிறகு ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது. இந்த ஷெட்யூலில் அஜீத் காயம்பட்டு வீடு திரும்பிவிட்டார். தற்போது அடுத்த ஷெட்யூல் அடுத்த வாரம் அதே ஹைதராபாத்தில் துவங்குகிறது.
இதை முடித்துவிட்டுத்தான் வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றியே படக் குழுவினர் திட்டமிடுவார்களாம்.
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்று இயக்குநர் பிடிவாதம் பிடிக்கிறாராம். வெளிநாட்டு லொகேஷனில் ஒரு பாடல் காட்சியும், சில சண்டை காட்சிகளும் படமாக்கப்பட வேண்டுமாம்.
எந்த நாட்டில் படமாக்குவது என்பதே தெரியாத குழப்ப நிலை இப்போது இருப்பதினால், கடைசிக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகும் என்று உறுதியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனாலேயே படம் ஏப்ரல் 14 வருமா.. அல்லது மே 1-ம் தேதி வருமா என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.