Friday, November 22, 2024

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிவாஜி சொன்ன அறிவுரை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ஜி.ஆர்., படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்படும்போது பெரும்பாலும் அந்த பாடல் பதிவில் பங்கேற்பது எம்ஜிஆரின் வழக்கம். ஆனால் சிவாஜி அப்படி இல்லை. பெரும்பாலும் தன்னுடைய படங்களின் பாடல் பதிவிலே அவர் கலந்துகொள்ள மாட்டார்.

அப்படிப்பட்ட சிவாஜி, ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கான பாடல் பதிவு நடைபெற்றபோது அந்த ஒலிப்பதிவு கூடத்துக்கு வந்தார். அவர் அப்படி வருகை தந்தது அந்த படக் குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

அன்று சிவாஜிக்காக “பொட்டு வைத்த முகமோ” என்று தொடங்கும் பாடலை பாட இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடல் பதிவுக்கு முன்னாலே அவரை தனியாக அழைத்து சிவாஜி “உன்னுடைய பாட்டெல்லாம் நான் கேட்டுகிட்டுத்தான் இருக்கேன். ரொம்ப நல்லா பாடறே. உனக்குன்னு ஒரு வித்தியாசமான பாணி இருக்கு. எனக்காக பாடும்போது அது எதையும் நீ மாத்திக்க வேண்டாம்.

டி.எம்.சௌந்தரராஜன் பாணியில் பாடினால்தான் எனக்குப் பிடிக்கும்’ என்று சொல்லி சிலர் உன்னைக் குழப்பலாம். நீ அதையெல்லாம் ஏத்துக்க வேண்டாம். அதை சொல்லிட்டுப் போகத்தான் முக்கியமாக நான் இங்க வந்தேன். நீ உன் பாணியில் பாடு…” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ஆலோசனை சொல்லிவிட்டு அந்த ஒலிப்பதிவு கூடத்திலிருந்து கிளம்பினார் சிவாஜி.

“சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர். வளர்ந்து வருகின்ற ஒரு பாடகனுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை என்னை மெய்சிலிர்க்க வைத்தது…” என்று பல பத்திரிகை பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

- Advertisement -

Read more

Local News