இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2ன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்பு பணி மட்டுமே உள்ளது. அமைதியாக வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.இந்தப் படம் முதல் பாகத்தைப்போன்று ஹீரோ ஹீரோயினை துரத்தும் படமாக இது இருக்காது. கதிர் கதையைதான் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கப்போகிறேன். ஆனால், காலம் மாறிவிட்டது. 10 ஆண்டுகள் கழித்து என்ன என்பது தான் படம்.2ம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது முதல் பாகத்தின் முடிவுலேயே இருக்கிறது.படங்கள் வெளியிட தேதி கிடைப்பது தீபாவளி, பொங்கலுக்கு தேதி கிடைப்பது போன்று ஆகிவிட்டது. பான் இந்தியா படங்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுபோன்று சின்ன படங்கள் வெளியிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது.
