1976 ஆம் ஆண்டு ‘மன்மதலீலை’ படத்தில் அறிமுகமாகி, வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம் , நகைச்சுவை என பலவிதமான பாத்திரங்களில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், டத்தோ ராதாரவி. எழுபது வயதை கடந்த ராதாரவி, இப்போது ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர், ‘கடைசி தோட்டா’.

இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக, ராதாரவி நடித்துள்ளார். ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னர் வேடமாம். ஸ்ரீகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை காட்சிகளில் வையாபுரி, கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசைமைக்க, பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். விவி பிரசன்னா, கானா சுதாகர், டெய்ஸி ஆகியோர் பாடியுள்ளனர். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லோகேஷ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார், இயக்குநர்நவீன் குமார்.