Friday, April 12, 2024

‘அண்ணாத்த’ படத்தை வெளியிட 37 இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குத் தடை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த’ திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்ட விரோதமா இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது.

இயக்குர் ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சட்ட விரோதமாக இணையத் தளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், “காப்புரிமை சட்டத்தின்படி அண்ணாத்த’ திரைப்படத்தின் வெளியிடும் உரிமை, விநியோக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே உள்ளது. இந்தப் படத்தை வேறு எந்த நிறுவனமும் வெளியிட உரிமை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இப்போதை காலக்கட்டங்களில் சட்ட விரோதமாக பல இணையத் தளங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

BSNL, புதுடெல்லி மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், பாரதி ஏர்டெல், ஏர்செல் செல்லுலார் லிமிடெட், மும்பையைச் சேர்ந்த ஹாத்வே கேபிள் டேட்டா காம், புதுடெல்லி எக்சைடெல் பிராட்பேண்ட், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இன்பிராஸ்டக்சர், டாடா டெலிசர்வீஸ், சென்னையைச் சேர்ந்த சிபி டெக்னாலஜிஸ், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஏசியாநெட் சாட்டிலைட் கம்யூனிகேஷன், டாட்டா இன்போசிஸ் கோவையைச் சேர்ந்த ரெடி லிங்க் இண்டர்நெட் சர்வீஸ், கோவையைச் சேர்ந்த நெக்ஸ்ட் ஜென் கம்யூனிகேஷன், தெலுங்கானாவை சேர்ந்த விர்கோ குளோபல் மீடியா, ஈரோட்டை சேர்ந்த மை நெட் சர்வீஸஸ், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த லிம்ராஸ் ஏரோநெட் பிராட்பேண்ட் சர்வீஸஸ், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.பிராட்பேண்ட் சர்வீஸஸ், மயிலாப்பூரை சேர்ந்த பல்சே டெலிசிஸ்டம் உள்ளிட்ட 37 இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் திரைப்படப் பாடல்கள், காட்சிகள் போன்றவற்றை மறு தயாரிப்பு செய்து சிடி, டிவிடி, விசிடி புளு ரே டிஸ்க், கம்ப்யூட்டர் டிரைவ், பென் டிரைவ் ஆகியவற்றில் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றன.

மிகக் குறைந்த விலையில் இவற்றை பொதுமக்களுக்கு விற்பனையும் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் அனுமதி பெறாமல் தியேட்டர்களில் ரெக்கார்டிங் செய்தும் வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு சன் நெட்வொர்க் ‘அண்ணாத்த’ திரைப்படம் தொடர்பான எந்த உரிமையையோ, அனுமதியையோ தரவில்லை.

டேட் டவுன் என்ற முறையில் பல இணையத் தளங்களும் சட்ட விரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து வெளியிட்டு வருகின்றன. பல வலைத்தளங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த இணையத்தளங்களும், வலைத்தளங்களும் வேறு பெயரில் உலா வருகின்றன.

‘தோப் டிவி’ என்ற ஒரு இணையத்தளம் கூகுள் குரோமை பயன்படுத்தி விதிகளுக்கு முரணாக இணையத் தள செயலிகளை வெளியிட்டு வருகிறது.

எங்களது நிறுவனம் எந்த இணையத்தள நிறுவனத்திற்கும், ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் உரிமையைக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

எனவே, ‘அண்ணாத்த’ திரைப்படத்தை அனைத்து இணையத்தளங்கள், டெலிகிராம், தோப் டிவி, சபாரி, குரோம், டிஜான் மொபைல் பிரவுசர் போன்றவற்றில் சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ, வெளியிடவோ கூடாது என்று என்று தடைவிதித்த உத்தரவிட வேண்டும்..” என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சினேகா ஆஜராகி “அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று வாதிட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘அண்ணாத்த’ படத்தினை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்ட விரோதமான இணையத் தளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

- Advertisement -

Read more

Local News