பிரபல கதை திரைக்கதை ஆசிரியர் கலைஞானம், பாரதிராஜாவுடனான சுவாரஸ்யமான அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப சேனலில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு அனுபவம்..
நெல்லையில் கண்ணன் என்பவர் இருபது நிமிட நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். ஊரில் பஞ்சாயத்து நடக்கிறது.. ஒருத்தனை இருன்னொருவன் சாதியைச் சொல்லி திட்டிவிட்டான்.. இதனால் சாதிச் சண்டை மூள்கிறது.. நாடகத்தின் முடிவில்… சாதிகள் இல்லையடி பாப்பா.. என்ற பாரதி பாடல் ஒலிக்கிறது.
இதுதான் நாடகம். மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நாடகத்தைப் பார்த்த பாரதிராஜா, இதைத் திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டார். பலரிடமும் கதையைச் சொல்லி, முழு நீள சினிமாவுக்கு காட்சிகள் அமைக்கச் சொன்னார். ஆனால், ‘இருபது நிமிட நாடகத்தை எப்படி முழு நீள சினிமாக எடுக்க முடியும்’ என தயங்கி ஒதுங்கினர்.
இந்த நிலையில், கலைஞானத்திடம் கதையைச் சொன்னார் பாரதிராஜா. அவர், ‘ஓட்டலில் எனக்கு ரூம் போடுங்கள். இரண்டு இட்லி வாங்கிக் கொடுங்கள். பசிக்கும்போது சாப்பிடுகிறேன். நாளை காலை பதினோரு மணிக்கு வாருங்கள். முழு நீள திரைப்படத்துக்கான காட்சிகள் தயாராக இருக்கும்’ என்றார் கலைஞானம்.
பாரதிராஜாவும் கிளம்பிச் சென்றார். மறுநாள் பதினோரு மணிக்கு வந்தார்.
முப்பது காட்சிகள் தயாராக இருந்தன. ஆச்சரியப்பட்ட பாரதிராஜா, தனது கைப்பையில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து கலைஞானத்திடம் கொடுத்தார்.
அதோடு, ‘கணக்கு பார்க்கலை.. உன் அறிவுக்கு இந்த மரியாதேயே குறைவு’ எனநெகிழ்ந்து சொன்னார்.
அப்படி உருவான படம்தான், வேதம் புதிது.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..