KRG குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தயாரிப்பாளருமான கண்ணன் ரவி – தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.எம். கதிர் ஆனந்த் – சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியின் மகள் கே. செந்தாமரையைத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமண வரவேற்பு அக்டோபர் 31-ம் தேதியும், திருமணம் நவம்பர் 1-ம் தேதியும் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகங்களைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல், தொழில் துறைகளின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட துறைகளில் KRG குழுமம் செயல்பட்டு வருகிறது. கண்ணன் ரவி தலைமையிலான இக்குழுமம் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. KRG Productions சார்பில் ‘இராவண கோட்டம்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘TN 2026’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளனர்.மேலும் சில படங்களை தயராகி வருகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளில் தீபக் ரவியும் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.



