ரசவாதி படத்தில் அர்ஜூன் தாசின் பிளாஷ்பேக் காதலியாக நடித்தவர் ரேஷ்மா வெங்கடேஷ். அந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன்தான் ஹீரோயின். ரேஷ்மா ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். என்றாலும் படத்தில் இடம்பெற்ற அவரது பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது.இந்த நிலையில் ‘சாலா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ரேஷ்மா. பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது. தீரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக ரேஷ்மா நடிக்கிறார். ‘மெட்ராஸ்’ சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more