Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விருது நிச்சயம்! கமல்ஹாசன் நம்பிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரிதிவிராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கி இருக்கும் படம் ‘தி கோட் லைப்’. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு தமிழில் ‘ஆடுஜீவிதம்‘ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் டிரெயிலர் வெளியான பிறகு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. நடிகர் கமலஹாசன், இயக்குநர் மணிரத்னம் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு படம் பார்த்தனர்.


நடிகர் கமலஹாசன் இந்தப் படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், “தி கோட் லைப்’ படம் பார்த்து மனம் குளிர்ந்து உள்ளேன். இந்தப் படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படம் வெகுசிறப்பாக அமைந்துள்ளது. இதில் நடித்துள்ள நடிகர்கள் மிகுந்த சிரமம் எடுத்து நடித்து உள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தின் தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது. இந்தப் படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும். இந்தப் படம் கண்டிப்பாக விருது பெறும்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.

- Advertisement -

Read more

Local News