பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெற்ற பாடகியான கேட்டி பெர்ரி புளூ ஆரிஜினின் என்எஸ்-31 திட்டத்தின் மூலம் புதிய வரலாறு ஒன்றைப் படைக்கவுள்ளார்.அந்தத் திட்டத்தின் மூலம் 1963 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற வலண்டீனா தெரெஸ்க்கோவாவுக்கு பின்னர் பெண்கள் மட்டும் அடங்கிய ஒரு குழுவினர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். இவர்கள் நியூ ஷெபர்ட் விண்கலம் மூலமாக வருகிற செப்டம்பர் மாதத்தில் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர்.
