மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இச்சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் தனது அடுத்தப்படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியான நிலையில் அதே லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் நடித்து வரும் விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளிவராமல் உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் குமாரின் அடுத்தப்படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார்.
தற்போது நடிக்கும் எல்லா டாப் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்கள் மற்ற மொழி நடிகர்கள் என அனைவரையும் இணைத்து படங்களை எடுத்து பிரமாண்டமாக வெளியிடுகின்றனர் வெற்றியும் காண்கின்றனர். அதேபோல் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் பல பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டம் தீட்டி இருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறிபாக பாலிவுட் ஸ்டார்களான நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அனிமல் படத்தின் வில்லன் பாபி தியோல் இவர்கள் இருவரிடமும் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு வருவதாகவும் அதே போல் ஒரு பாலிவுட் நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.இதுகுறித்த சூப்பரான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு ஷூட்டிங் புறப்பட்டால் தான் அந்த படம் மேற்கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகரும் என்றும் இல்லை என்றால் விடாமுயற்சி படத்தை ஓரம்கட்டிவிட்டு நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க புறப்பட்டுவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.