Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

வரலக்ஷ்மி சரத்குமாரின் கோலாகல திருமண வரவேற்பு நிகழ்ச்சி… முதல்வர் முதல் பிரபலங்கள் வரை பலர் பங்கேற்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். அந்தக் காதலை வரலட்சுமியின் குடும்பம் ஏற்றுக்கொண்டது. இதனால், அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். நிக்கோலாய் ஒரு தொழிலதிபரும், ஆர்ட் கேலரியின் உரிமையாளருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவர்கள் திருமணம் நேற்று தாய்லாந்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி இன்று அது நடந்தது. வரலட்சுமி மைல்டு சிவப்பு நிற கவுன் அணிந்திருந்தார். நிக்கோலாய் கோட் அணிந்திருந்தார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை , முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் கலந்துகொண்டனர். நடிகர்கள் சித்தார்த் ,சிபி ராஜ், நாசர் , ராதா ரவி, சுரேஷ் கோபி என மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News