Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வயநாடு நிலச்சரிவு… நிதியுதவி அளித்து உதவிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவ மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த, நிவாரண உதவிகளை மேற்கொள்ள பல சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே விக்ரம் ரூ.20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், மோகன்லால் ரூ.3 கோடி, அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம், சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து ரூ.1 கோடி, பிரபாஸ் ரூ.2 கோடி, தனுஷ் ரூ.25 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

இவர்களது உதவிகளைத் தொடர்ந்து, நடிகர் பிரித்விராஜ் தற்போது கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News