லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தயாரித்துள்ள, 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், 19ம் தேதி அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தது.
ஆனால், ‘இந்த நாட்களில் காலை ஏழு மணி முதல் இரவு 1.30 மணி ஐந்து காட்சிகளை திரையிடலாம்’ என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் ரசிகர்களின் பாதுகாப்புக்கு திரையரங்க நிர்வாகம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. கூடுதலான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதைத் தடுக்க, தனி குழுவையும் அமைத்து உள்ளது.
அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.