Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்… அட இது எப்போ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், ‘தோழா’ மற்றும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பின்னர் ஜீவாவை வைத்து இயக்கிய ‘ஜிப்ஸி’ திரைப்படம் வெளியானது. கதை நல்லதாக இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதற்குப் பிறகு அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ‘ஜப்பான்’ படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான இப்படம், கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியாக முடிந்தது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது.

இதையடுத்து, அவர் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, அந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோவில்பட்டியில் பெரும்பாலான காட்சிகள் முடிந்த நிலையில், தற்போது சென்னையில் சில காட்சிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News