விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படம் “மழை பிடிக்காத மனிதன்,” ரோமியோ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது.அதற்குப் பின்பு, இன்று `தீரா மழை’ என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட, படம் தொடர்பான மேலும் சில அப்டேட்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.