தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து திரைக்கு வந்துள்ள டிராகன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி உள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் உற்சாகமடைந்துள்ளார்கள். காரணம் டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை வியாபாரத்தை பேசுவதற்கு பல விநியோகஸ்தர்களும் முன்வர தொடங்கி விட்டார்களாம். அதனால் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை கொடுக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
