Thursday, April 11, 2024

படத்தின் பெயர்கள் மாறிய கதை! – லிங்குசாமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் என்.லிங்குசாமி தனது படங்களுக்கு பெயர் முடிவு செய்து, அதை பதிவு செய்ய செல்லும் போது வேறு ஒருவர் அந்த பெயரை பதிவு செய்து வைத்திருப்பதை அறிந்து புது பெயர் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாராம். அந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.

“‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்பதுதான் என்னுடைய முதல் படத்திற்காக நான் வைத்த டைட்டில். ஆனால் அந்த டைட்டிலை பதிவதற்காக சென்றபோது பிரியாத வரம் வேண்டும் பட தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி சேரனின் இயக்கத்தில் உருவாக்குவதற்காக அதை பதிந்து வைத்திருந்தார்கள்.

நம் சூப்பார் குட் கம்பெனியில் பணியாற்றி இருக்கிறாரே அவரிடம் கேட்டால் கொடுத்து விடுவார் என்கிற எண்ணத்தில் சேரனிடம் சென்று கேட்கச் சொன்னார் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி. சேரனிடம் சென்று கேட்டபோது, “என் கையில் எதுவும் இல்லை. தயாரிப்பாளரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவரை போய் பாருங்கள்” என்று கூறினார். அவரை சென்று சந்தித்தபோது நாங்கள் இந்த படம் பண்ணுவதற்காக தான் வைத்திருக்கிறோம் யோசித்து சொல்கிறேன் என கூறிவிட்டார்.

முதல் படத்தில் டைட்டிலையே ஓகே பண்ண முடியாதவன் என்ன டைரக்ட் பண்ணப் போகிறான் என சவுத்ரி சார் சொல்லி விடுவாரோ என பயந்தேன். முதல் படம் என்பதால் எல்லா விஷயத்துக்கும் பயம் இருக்கும். அந்த சமயத்தில் ஒரு நாள் எங்கள் டிஸ்கஷன் அறையில் படுத்திருந்தபோது தாங்கள் எழுதி இருந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்கிற டைட்டிலில் விளையாடும் வீடு என்கிற பெயர் மறைத்து ஆனந்தம் என்கிற பெயர் மட்டும் கண்களில் பட்டது. அப்போது கதாசிரியர் பிருந்தாவை எழுப்பி நமக்கான டைட்டில் கிடைத்து விட்டது. ஆனந்தம் தான் டைட்டில் என்றேன்.

ஆர்.பி சவுத்ரியின் ஆனந்தம் என்று சொல்லி இதை ஓகே பண்ணலாம் என நினைத்தோம். அதற்கு முன்பாக அந்த டைட்டிலாவது கிடைக்குமா என செக் பண்ணிக் கொள்வதற்காக சென்றால் மணிரத்னம் சார், தான் இயக்கிய இருவர் படத்திற்காக முதலில் அதைத்தான் பதிவு செய்து வைத்திருந்தவர். அதன்பின் அதை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த டைட்டில் காலாவதி ஆகி இருந்தது. உடனடியாக அந்த டைட்டிலை பதிவு செய்துவிட்டு சவுத்ரி சாரிடம் சென்றேன்.

அவரிடம் சென்று டைட்டிலில் சின்ன மாற்றம் என்று கூறி ‘ஆர்.பி சவுத்ரியின் ஆனந்தம்’ என டைட்டிலை சொன்னேன். உடனே சவுத்திரி சார், இந்த கம்பெனியில் இப்போது ஆனந்தம் (அப்போது அவரது இரண்டு படங்கள் போகவில்லை ) மட்டும் தான் இல்லை என்று தமாசாக சொன்னவர், தாராளமாக இதை வை என்று கூறினார்.

ரன் படத்திற்காக ‘பிடிச்சிருக்கா’ என்கிற டைட்டிலை தான் முதலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கூறினேன். ஆனால் அவரோ சந்தேக தொனியுடன் ஒரு டைட்டில் வேண்டாம்.. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பிடிச்சிருக்கா பிடிக்கலையா என அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும்.

இப்படித்தான் எஸ் ஜே சூர்யா குஷி படத்திற்கு முத்தம் என முதலில் டைட்டில் வைத்திருந்தார். யாராவது தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது முத்தம் இரண்டு கொடுங்கள் எனக்கு கேட்பார்களா? பெண்கள் எப்படி வந்து டிக்கெட் கேட்பார்கள் ? அதனால் டைட்டிலை மாற்றுங்கள் என்று கூறி அதன் பிறகு வைக்கப்பட்டது தான் ‘குஷி’ என்ற ஏ.எம்.ரத்னம் தான் ‘ரன்’ என்கிற டைட்டிலையும் வைத்தார்.

பையா டைட்டில் யோசிக்கும்போது, ஏற்கனவே கார்த்திக்கு பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என கொஞ்சம் பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது. இது கொஞ்சம் சிறிதாக, கூலாக இருக்க வேண்டும் என நினைத்தோம். இது போன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு பையா என்கிற டைட்டிலை கூறினேன். என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.. எனக்கு அப்போதும் சரி இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது என்று படத்தின் பெயர் மாறியதற்கான தகவலை கூறி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News