Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவில்லை… மனம் திறந்த‌ நடிகை மாளவிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாடல் அழகியான மாளவிகா தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படமே அவருக்கு வெற்றியை அளித்தது. தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ளார், இதற்கான காரணத்தை முதன் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.

தற்போது, இவர் இயக்குனர் பொன் சரவணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜீவா, தன்யா ஹோப், பாயல் ராஜ்புட் நடித்துள்ள படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள மாளவிகா, சினிமாவில் இருந்து ஒதுங்கியதற்கான காரணம் பற்றி பேசி உள்ளார். “சிறுவயதில் இருந்தே சினிமா மீது எனக்கு காதல் இருந்ததால், மாடலிங்கில் விளம்பர படத்தில் நடித்தேன். அதன் பின், படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவில்லை. திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் கமிட் ஆகியிருந்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால், படங்களில் நடிக்க முடியாது என்று உறுதி செய்து வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். இதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது,” என்று நடிகை மாளவிகா கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News