Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகை இலியானா  கர்ப்பம் என அறிவிப்பு: தந்தை யார் என்பதில் சஸ்பென்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை இலியானா டி குரூஸ் கர்ப்பமாக இருப்பதாக  அறிவித்தார். இன்ஸ்டாகிராமில், “விரைவில் வருகை, என் குட்டி அன்பே உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இலியானா தனது பதிவில் இரண்டு புகைப்படங்களைச் சேர்த்துள்ளார்; முதலாவது புகைப்படத்தில் குழந்தைகள் அணியக்கூடிய உடை, இரண்டாவது புகைப்படத்தில் ‘அம்மா’ என்று எழுதப்பட்ட பதக்கச் சங்கிலி.

இலியானா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் குழந்தைகள் அணியக் கூடிய உடையில் “அதனால் சாகசம் தொடங்குகிறது,” என்று எழுதப்பட்டுள்ளது. இலியானாவின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கருத்துகள் பிரிவில் அவருக்கு அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தனர். இலியானாவின் தாயார் சமிரா டி குரூஸ், “எனது புதிய பேரக் குழந்தையே விரைவில் உலகிற்கு வா, என்னால் காத்திருக்க முடியாது” என்று கருத்து தெரிவித்ததோடு, சிவப்பு இதயம் மற்றும் நடன எமோஜியையும் சேர்த்துள்ளார்.

மேலும் பல சமூக ஊடக பயனர்கள் இலியானாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். “ஆஹா, வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்” என்று ஒரு ரசிகர் எழுதினார். “வாழ்த்துக்கள் அன்பே” என்று மற்றொருவர் எழுதினார்.

ஆனால் குழந்தையின் தந்தையார்  என்பதை இலியானா சொல்லவில்லை.

- Advertisement -

Read more

Local News