மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் ஜீத்து ஜோசப். மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய திரிஷ்யம் படத்தின் வெற்றி மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் வரை இவரை அடையாளப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நுனக்குழி என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். மின்னல் முரளி பட இயக்குனரும் சமீபத்தில் வரவேற்பை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படங்களில் ஹீரோவாக நடித்தவருமான பசில் ஜோசப் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.ஆச்சரியமாக இதுநாள் வரை சீரியஸான படங்களை மட்டுமே கொடுத்து வந்த ஜீத்து ஜோசப், இந்த படத்தில் முதன்முறையாக காமெடி ஏரியாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000044529-819x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000044530-1024x682.jpg)