நடிகை சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை இயக்கிய குணசேகர், தற்போது புதுமுகங்களை இணைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாரா அர்ஜுன், நாசர், ரோஹித், விக்னேஷ் ஆகியோர்களுடன் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் பூமிகா ஆகிய இருவரும் முக்கியமான வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158401.jpg)
இதற்கு முன்பு, தெலுங்கு மொழி படங்களில், சீதாராமம், மைக்கேல், உஸ்தாத் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த கவுதம் மேனன், இந்த படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடிக்க உள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158400.jpg)
மேலும், கவுதம் மேனன், சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.