Tuesday, November 19, 2024

தி கோட் படத்தில் நடிக்காத மிர்ச்சி சிவா… நோ சொன்ன வெங்கட் பிரபு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் கோட் திரைப்படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை உங்களை வெங்கட் பிரபு அழைக்க வில்லையா என்ற கேள்விக்கு தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் நடிகர் மிர்ச்சி சிவா.

சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கலகலப்பு 3 படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக யூடியூப் சேனல்களின் பேட்டியில் நடிகர் மிர்ச்சி சிவா தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் தமிழ் படம் 3 எப்போது வரும் என்ற கேள்விக்கு தமிழ் படம் 3 விரைவில் வரும் கேஜிஎஃப் போன்ற பெரிய படங்கள் வந்த நிலையில் அந்த படங்களை வைத்து நன்றாக ஃஸ்பூப் செய்யலாம் என நகைச்சுவையாக கூறினார்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 மற்றும் சென்னை 600028-2ம் பாகம் உள்ளிட்ட படங்களில் சிவா நடித்துள்ள நிலையில் மங்காத்தா, மாநாடு கோட் போன்ற படங்களில் நடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பினர் அதற்கு வெங்கட் பிரபு எப்போதுமே எனக்கான கதாபாத்திரத்தை எழுதினால் என்னை அழைப்பார் இல்லாவிட்டால் என்னை வேண்டுமென்றே இன்செர்ட் செய்யுங்கள் நான் அடம்பிடிக்க மாட்டேன் என பளீச் என்று பதில் அளித்துள்ளார்.

அதேசமயம் ஒரு திரைப்பட இயக்குனருக்கு நன்றாகவே தெரியும் அந்தப் படத்திற்கு யார் தேவை யார் தேவை இல்லை என்பது என்றார்.கோட் படத்தை அவர் வேறலெவலில் எடுத்து வருகிறார் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைக்கும் விதமாக தி கோட் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News