Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

திகில் கிளப்பும் வீடியோவை வெளியிட்ட தம்மன்னா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக வருகின்ற மே 3ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தில் பயமூட்டும் பல பேய் காட்சிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததாகவும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் தானே செய்ததாகவும் தமன்னா கூறியுள்ளார்.

அரண்மனை 4 படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ளார் தமன்னா. அவரது இப்படித்தான் கதாப்பாத்திர தோற்றம் பெரிய அளவில் பேசப்படுவதால், இப்படம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.ஹிப் ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அரண்மனை 4 திரைப்படம் மே 3ம் தேதி வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News