Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தயாரிப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைக்கும் புஷ்பா பட இயக்குனரின் மனைவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். பல ஹிட் படங்களை இவர் கொடுத்து இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதாவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகரான ராவ் ரமேஷ் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள மாருதி நகர் சுப்பிரமணியம் என்கிற படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திரைப்பட வெளியீட்டாளராக சினிமாவில் தற்போது நுழைந்துள்ளார் தபிதா.

- Advertisement -

Read more

Local News