Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

தனது குட்டி ரசிகரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மம்முட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மம்முட்டி தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்த படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் மகாதேவ் என்கிற சிறுவன் அந்தப் படத்தின் பூஜையன்று படப்பிடிப்பு தளத்தில் துறுதுறுவென்று சுற்றியுள்ளான். அவன் மம்முட்டியின் ரசிகன் என்றும் மம்முட்டி நடித்து கடந்த வருடம் வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தை பலமுறை திரும்பத் திரும்ப பார்க்கிறான் என்கிற தகவலும் மம்முட்டியின் காதுகளுக்கு எட்டியது.  அதேபோல் சிறுவனின் பிறந்தநாளும் வரப்போகிறது என்பதை கேள்விப்பட்ட மம்முட்டி அவனது பிறந்த நாளன்று ஒரு லம்பார்கினி கார் பொம்மையை பரிசாக வாங்கிக்கொண்டு அந்த சிறுவனின் வீட்டிற்கே நேராக சென்றார். மம்முட்டியின் வருகையை எதிர்பாராத அந்த சிறுவனும் அவனது பெற்றோரும் மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அவனுக்கு பிறந்தநாள் பரிசளித்து வாழ்த்தி விட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் மம்முட்டி.

- Advertisement -

Read more

Local News