Thursday, April 11, 2024

தடைகள் தாண்டி ஜெயித்து ’’காதலிக்க நேரமில்லை’’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிழ் சினிமாவில் நவீனத்தை புகுத்தியவர்  இயக்குனர் ஸ்ரீதர். இவர் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு “காதலிக்க நேரமில்லை”திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் எத்தனை தடைகளை தாண்டி வந்தது என்பது யாருக்கும் தெரியாது. முதலில் ஸ்ரீதர் இயக்கவிருந்த திரைக்கதை சரி வராமல் போனதால் பாதியில் நின்று போனது. அதே திரைப்படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்தார் ஸ்ரீதர்.

திரைப்படத்திற்கு பூஜை போட எல்லா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஸ்ரீதரின் செண்டிமெண்டாக ஒளிப்பதிவாளர் வின்சென்ட் சிறு வயது மகனை கேமரா பட்டனை ‘On’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் வின்சென்ட்டின் மகன் ஏதோ காரணத்தினால் செட்டை விட்டு வெளியேற, பூஜைக்கு வரவேண்டிய ஐயரும் வரவில்லை.சரி படக்குழுவை வைத்து பூஜையை தொடங்கலாம் என்று கற்பூர ஆரத்தி எடுத்த போது அதுவும் அணைந்து விட்டதாம். இது பெரிய அபசகுணமாக அங்கிருந்தவர்கள்  கருதி இருக்கின்றனர்.

ஆனால் ஸ்ரீதர் இதை விடவில்லையாம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் கேமராவின் பெல்ட்டும் அருந்து விழுந்து விட்டதாம்.  

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஸ்ரீதர் தனது முழு திறமை, உழைப்பை நம்பி நம்பிக்கையுடன் தடைகளை தாண்டி படத்தை எடுத்து முடித்தார்.

தடை மற்றும் அபசகுணங்களை கடந்து உழைப்பின் மீது நம்பிக்கை வைத்த ஸ்ரீதரின் “காதலிக்க நேரமில்லை” மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

- Advertisement -

Read more

Local News