விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா ரவி ஒரு மிகச் சவாலான போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளர் தொடர்ந்து இரண்டு முறை கேப்டன்சி டாஸ்க்கிற்கு மற்ற போட்டியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டவர் என்றால் அது பூர்ணிமா ரவிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த பிரபலமடைந்த பூர்ணிமா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.



பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பூர்ணிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் நயன்தாரா நடித்த அன்னப்பூரணி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல், செவப்பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதாகவும் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பூர்ணிமா ரவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அண்மையில் நடத்திய போட்டோஷூட்டின் போது எடுத்த வீடியோவை, இளையராஜாவின் இசையில் உருவான பனிவிழும் மலர்வனம் பாடலுடன் சேர்த்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பூர்ணிமா ரவி சேலை கட்டி, ஹோம்லியாகவும் கொஞ்சம் கிளாமராகவும் இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை தட்டி வருகின்றனர். சிலர் பூர்ணிமாவை தமிழ் அழகி என்றும், டஸ்கி ஸ்கின் குயின் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.