சினிமா உலகில் அறிமுகமான ஆண்ட்ரியா இன்று ஒரு பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவராக இருந்தாலும், தனது பாடக உருவத்தையும் பராமரித்து வருகிறார். அவ்வப்போது கான்செர்ட்களும் நடத்திவருகிறார், அதற்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. படங்கள், பாடல்கள் என இரண்டு துறையிலும் கலக்கி வரும் ஆண்ட்ரியா தற்போது ‘கா’ படத்தில் நடித்தார்.

மேலும், கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுஷி’ என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் ஒரு ஆடையகத்தை திறந்துவைத்தார் ஆண்ட்ரியா. மேலும் நெக்சா சைமா நாமினேஷ் பார்ட்டியில் அவர் கிளாமர் உடையில் எடுத்துக்கொண் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.மேலும் அவரிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டார். இந்த செய்தியும் தற்போது தீயாய் பரவி வருகிறது.