தமிழ் சின்னத்திரையில் புகழ்பெற்ற தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. க்யூட்டான லுக்கில் அனைவரையும் கவர்ந்த அவர், டிடி, பாவனா, ரம்யா, அர்ச்சனா எனப் பிரபல தொகுப்பாளினிகளின் வரிசையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அஞ்சனா ஆர்மி என்று இவருக்காக ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அவர்கள் தினமும் அஞ்சனாவின் க்யூட்டான படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கிய இவர் புதுயுகம், ஜீ தமிழ் போன்ற சேனல்களிலும் பணியாற்றி இருக்கிறார்.



சன் மியூசிக்கில் வேலை பார்த்தபோதே கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, அவ்வப்போது மகனுடனும் கணவர் சந்திரனுடனும் அழகான போட்டோக்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தான் அணிந்திருக்கும் சட்டை பட்டனை கழற்றி விட்ட நிலையில், செம குத்தாட்டம் போட்டு அசத்தி இருக்கிறார். “நம்ம அஞ்சனாவா இப்படி…” என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் லைக் செய்து வருகிறார்கள்