சிங்கீதம் சீனுவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம், அபூர்வ சகோதரர்கள்.
படம் குறித்து ஒருமுறை சிங்கீதம் சீனுவாசராவ், அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருந்தார்.
“அந்த படத்தில் ஒரு காட்சியில் கமலுடன் புலியும் இருக்கும். அப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கிடையாது. தவிர குறிபபிட்ட காட்சியில் கமல் முட்டி வரை புதைக்கப்பட்டு இருந்தார். அந்த புலியின் ட்ரைனர் என் அருகில் இருந்தார். அப்போது அவர், ‘ஒரு முறை கொல்கத்தாவில், இந்த புலி குழந்தை ஒன்றின் மீது பாய்ந்து தாக்க.. அந்த குழந்தை இறந்துவிட்டது’ என்றார்.
அடப்பாவி இப்போது இதை சொல்கிறாயே… அந்த புலிககுப் பக்கத்திலேயே கமல் நிற்கிறாரே.. என்றேன்.
நல்லவேளையாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி காட்சி முடிந்தது. படமும் பெரிய வெற்றி பெற்றது” என்றார்.