ஒரு யானைக்கும் அதை நேசித்த ஒரு ஹீரோவுக்குமான அழகான காதல் கதை தான் இது.வால்டர் படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் அன்பு இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் படை தலைவன். நேசித்த ஒரு ஜீவனுக்காக எந்த அளவிற்கும் போகிற ஒரு ஹீரோ… பிரச்சனைகளுக்காக பல விதங்களில் இறங்கி போராடி, ஒரு சாமானியனால் அந்த பிரச்னையை தீர்க்க முடியாமல் போகும் போது, தானே ஒரு படை தலைவனாக இறங்கி போராடித் தீர்க்கின்ற ஹீரோதான் இந்த படை தலைவன்.

சண்முக பாண்டியன் பற்றி இயக்குனர் அன்பு, கேப்டன் மகன் சண்முக பாண்டியன் மீது எனக்கு ஒரு தனி கவனிப்பும் அக்கறையும் உண்டு. இந்த கதை சொல்லும் போது மிகவும் ஆத்மார்த்தமாக கேட்டு அவர் ஒப்புக்கொண்டார் எனவும், கதை கேட்டு பிரேமலதா அவர்கள் மிகவும் சந்தோசம் அடைந்ததாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த படத்திற்காக உடம்பை ஏற்றி முடியை வளர்த்து உழைத்திருக்கிறார் சண்முக பாண்டியன்.
யானையும் சண்முக பாண்டியனும் கதையோடு ஐக்கியம் ஆகிவிட்டார்கள். பழகிய சில நாட்களிலேயே யானையிடம் அவர் மிகவும் நெருக்கமாகிவிட்டார். யானையும் அவரிடம் பிரியமாகிவிட்டது, இந்த படத்தோட கதை 70% காட்டுக்குள்ள நடக்குது பொள்ளாச்சியில் ஆரம்பித்து ஒடிசா வரைக்கும் பயணித்திருக்கும். யானை சண்முக பாண்டியனை அழகாக தும்பிக்கையில் தூக்கிட்டு போகும். சூட்டிங் முடிந்து லாரியில் யானையை கொஞ்சி ஏத்தி அனுப்புகிற வரைக்கும் முழுக்கவே சண்முக பாண்டியன் தான் யானையை பார்த்துக் கொள்வார்.

இவரோட ஆக்ஷன் அச்சு அசலா அப்படியே கேப்டன் மாதிரியே இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இது ஒரு உண்மை சம்பவம் தான்.இந்த படத்தை பிரேமலதா அவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய போது அவர்கள் மிகவும் சந்தோஷத்தில் கண்கலங்கினார். இந்த படத்தில் ஏ.சி.திரு.லோகச்சந்திராவோட பேத்தி யாமினி சந்திரன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இவரோடு டைரக்டர் கஸ்தூரிராஜா, முனீஸ்க்காந்த், அருள்தாஸ், ரிஷி என எல்லாரும் அருமையான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு திரைக்கதை வசனத்தில் நட்பே துணை இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு வலிமை சேர்த்துள்ளார்.
இப்படத்துக்கு இசையால் உயிரூட்டும் விதமாக இளையராஜா அவர்கள் கைகோர்த்தார்.கேப்டன் மகன் படம் என்றதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அவர் மீதான அன்பில், இப்படத்திற்காக மேலும் மெனக்கெட்டு உழைத்துள்ளார்.மக்கள் கொண்டாடும் விதமாக படைத்தலைவன் இருக்கும் என்றுள்ளார்.