குஷ்பு சுந்தர் மற்றும் ஏ.ஜி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர்.சி நடித்து இயக்கி இருக்கும் படம், ‘அரண்மனை 4’. இந்தப் படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை தமன்னா, குஷ்பு என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்தார்.
“சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர்.சி சாருடன் என்றால் ஓகே. என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம். அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார்.
குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட். மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார்.
கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இந்தப்படத்தில் நானும் அவருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பேணினார்.