தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் அதிரடி ஹீரோவாக உருவானவர் டாக்டர் ராஜசேகர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரு மகள்கள். இளைவவர், சிவாத்மிகா தமிழில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்திலும், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்திலும் சிவாத்மிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர், “கிளாமராக நடிக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லவும் செய்திருக்கிறார்.