Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரம் ‘ராஜபுத்திரன்’… முதல் முறையாக இணையும் நடிகர் பிரபு மற்றும் வெற்றி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ், கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன்.

முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கின்றனர் இவர்களோடு எங்களது பெருமைக்குரிய அறிமுகமாய் கன்னடத்து பிரபலம் கோமல் குமார் கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலரும் நடிக்க எங்கள் படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்‌.

அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் விதமாக டிஆரின் வெண்கல குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது அறிமுக இசை அமைப்பாளர் நவ்பல் ராஜா இசை அமைக்க, ஒளிப்பதிவு ஆலிவர் டேனி,, வெற்றிப்பட இயக்குனர்களாகிய வசந்த் சாய், மற்றும் நந்தா பெரியசாமி, அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தனின் விறு விறு இயக்கத்தில் ராஜபுத்திரன் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News