Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கிராமத்து கதைக்களத்தில் திரையரங்குகளில் களமிறங்கும் வாழை மற்றும் கொட்டுக்காளி… ஆகஸ்ட் 23ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுதந்திர தினத்தையொட்டி நேற்று தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியான நிலையில், ‘தங்கலான்’ மற்றும் டிமான்டி காலனி-2 படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. அதேசமயம், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ மற்றும் ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வர உள்ளன.

இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களுமே கடந்த காலத்தில் சிறந்த கருத்தியல் மற்றும் சமூக பார்வையை கொண்ட படைப்புகளை வழங்கியுள்ளனர் என்பதால், இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News