பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் ரோபா சங்கர். இவருடைய மகளான இந்திரஜா அவர் காதலித்து வந்த அவருடைய மாமா கார்த்திக்குடன் திருமணத்தில் இணைந்தார். ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்று ஒரு வாரம் களைகட்டிய அவரது திருமண விழா பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து கறி விருந்து வைத்து வாழ்த்தி இருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சார பணியில் தீவிரமாக இருந்தாலும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சரத்குமார், ராதிகா சரத்குமார் விருந்து கொடுத்து கௌரவித்தை நினைத்து பெருமைப்படும் ரோபோ சங்கர், இந்த சந்தோஷத்தை எப்படி பகிர்வது என்றே தெரியவில்லை என்று நெகிழ்ந்து போகிறார்.