மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கேரளாவில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழியிலும் அந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு அமைந்துள்ளதால் அந்தப் படக் கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

படம் வெளியான போது நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து முதல் ஆளாக பாராட்டி குணா படப்பிடிப்பின் போது நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இப்போது நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை வீட்டுக்கு அழைத்து பாராட்டி உள்ளார். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கடந்த வாரம் நடிகர் சிம்பு படக்குழுவினரை பாராட்டினார். இந்த சந்திப்பில் நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சொன்ன விதம் தனக்கு பிடித்திருந்தது என்றும், இந்தப் படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்ணோட்டமே மாறிவிட்டது என்றும் சிம்பு பதிவு செய்து படக்குழுவை வெகுவாக பாராட்டினார்.