கமல்ஹாசனை வைத்து மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் துல்கர் சல்மான்.தமிழ் சினிமாவில் துல்கர் சல்மான் ஓகே கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்து வெற்றியையும் பெற்றார்.மலையாள சினிமா உலகில் டாப் ஸ்டாராக இருக்கும் துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமான நிலையில் கால்ஷுட் பிரச்சனையால் அப்படத்தில் இருந்து விலகினார்.இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.இப்போது இவருக்கு பதிலாக இப்படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
அதேபோல் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மற்றொரு படம் நடிக்க இருக்கிறார் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் சிறந்த படங்களை தந்து வெற்றியும் தந்தவர்.இந்த திரைப்படத்திற்காக சிம்பு பல கலைகளை கற்று தயாரகி ஃபிட்டாக உள்ளார்.இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க காரணம் அவருக்கு கமலாக தந்த வாய்ப்பு தான்.
தயாரிப்பாளரிடம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதையை சொல்ல தயாரிப்பாளரும் பச்சை கொடி காட்டியுள்ளார் ஆனால் ஹீரோ கிடைக்காமல் திணறிய போது துல்கர் சல்மான் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

இப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தார் தேசிங்கு பெரிய சாமி.இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஹிட்-ஐ பார்த்த கமல் அவர் தயாரிப்பில் சிம்புவை வைத்து இயக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் என தகவல் வெளியானது.கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் கச்சிதமாக பயன்படுத்தும் தேசிங்கு பெரிய சாமி இப்படத்தையும் மிகப்பெரிய வெற்றி படமாக கொடுப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.