Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஒருவழியாக முடிவுக்கு வந்த சூரி விஷ்ணு விஷால் மோதல்… ரசிகர்கள் மகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டு இருப்பவர்கள் நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால்‌.வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்து இருப்பார்கள் அவர்கள் அவர்களுடைய நிஜ வாழ்விலும் நண்பர்களாகவே பயணித்து வந்தார்கள்.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஓட்டலுக்கு பரோட்டா சாப்பிட செல்லும் சூரி அங்கு மிகவும் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்‌.அந்த படத்தின் மூலம் பரோட்டா சூரி என்ற அடையாளத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெற்று மேன் மேலும் உயர்ந்தார்.அதுமட்டுமின்றி கடைசியாக விடுதலை பாகம் 1-ல் புதிய கதாபாத்திரத்தில் நாம் இதுவரை காணாத சூரியாக நடித்து அசத்தி இருந்தார் அதேபோல் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார் குறிப்பிடத்தக்கது.

சூரி மட்டுமின்றி அந்த படம் விஷ்ணு விஷாலுக்கும் நல்ல படமாக அமைந்தது.விஷ்ணு விஷாலும் சூரியும் சேர்ந்து குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட பல படங்களில் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர் அவர்களின் காம்போ வெற்றியும் பெற்றது. இதில் சூரிக்கு மேலும் ஒரு உயரத்தை கொடுத்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இப்படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடி ஹிட் ஆகி உலாவியது.

இப்படி நன்றாக போய் கொண்டு இருந்த இவர்களின் நட்பில் ஒரு விரிசல் விழுந்தது.அது என்னவென்றால் விஷ்ணு விஷாலின் தந்தை சூரிக்கு நிலம் ஒன்றை வாங்கி தருவதாக கூறி நிலமும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ரூபாய் 2.7 கோடியை ஏமாற்றிவிட்டார் என சூரி புகார் அளித்து‌ இருந்தார்.

இந்நிலையில் பல காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்து இருப்பாதாக தெரிகிறது.இந்த பிரச்சனைக்கு மூன்றாவது நபர் தான் காரணம் எனவும் சரியான புரிதல் இல்லாமல் போனதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் தற்போது இப்பிரச்சினைக்கு சுமுகமாக பேசி தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது.இதை உறுதிப்படுத்தும் விதமாக விஷ்ணு விஷால் மற்றும் அவர் தந்தை, சூரி ஆகியோர் மூவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

- Advertisement -

Read more

Local News