Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எஸ்.ஜே.சூர்யாவை பட்டியல் போட்டு பாராட்டிய ரசிகர்… நன்றி தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக மாறியவர்களில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. ‘வாலி, குஷி’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர், அதன்பிறகு சில படங்களை இயக்கினார். கடந்த பத்து வருடங்களாக படங்களை இயக்கவில்லை, ஆனால் நடிகராக மிகவும் பிஸியாக இருக்கிறார்.

எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த சில முக்கிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி அவரை ராசியான நடிகராக மாற்றியுள்ளது. இதை மனதில் வைத்து, ரசிகரும் Distributor-மான ஒருவர் ஒரு பட்டியல் போட்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் மற்ற நடிகர்களையும் பாராட்டியுள்ளார்.

எஸ்ஜே சூர்யா – மெர்சல், வாரிசு – விஜய்யின் உச்சம், மாநாடு – எஸ்டிஆரின் உச்சம், டான் – எஸ்கேயின் உச்சம், மார்க் ஆண்டனி – விஷாலின் உச்சம், ஜிகர்தண்டா 2 – லாரன்ஸின் உச்சம், ராயன் – தனுஷின் உச்சம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு, “ப்ரோ… எனி வே…. இறைவா..” என எஸ்ஜே சூர்யா நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News