2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கினார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.இதைத் தொடர்ந்து ‘கட்டா குஸ்தி 2’ உருவாகும் என தகவல் வெளியானது.
இப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ எடுக்க உள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் நகைச்சுவை மிக்க புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.